ரஷ்யாவில் கணக்கில் அடங்காத கொரோனா உயிரிழப்பு - ஆக்சிஜன் பற்றாக்குறை

0 4437

ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா உயிரிழப்புகள் தொடர்பான உன்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை என்றும் சுகாதாரத்துறை அறிவிப்பதை விட கூடுதல் அளவில் உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Oryol உள்ளிட்ட நகரங்களில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகளின் வாசலில் பல நூறு மக்கள் சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், அதனால் ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பல மருத்துவமனைகளில் மயக்க மருந்து நிபுணர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments