சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சிறிய தின்பண்டக் கடைகள் தீபாவளி முடியும் வரை மூடப்படும் ; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 22763
ரங்கநாதன் தெருவில் உள்ள சிறிய தின்பண்டக் கடைகள் தீபாவளி முடியும் வரை மூடப்படும்

சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள சிறிய தின்பண்டக் கடைகள் தீபாவளி முடியும் வரை மூடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அவர் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கொரோனா தொற்றை வாங்கிச்செல்ல வேண்டாம் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments