கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்து ; கேரள முன்னாள் அழகிகள் உயிரிழப்பு

0 6542
கார் விபத்தில் மிஸ் கேரளா மற்றும் அதே போட்டியில் 2ஆம் இடம் பிடித்தவர் பலி

கேரள மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் மிஸ் கேரளா பட்டம் வென்றவரும், அதே அழகிப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்தவரும் உயிரிழந்தனர்.

எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் இருவரும் சென்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற ஆன்சி கபீர், அதே அழகிப் போட்டியில் 2-ஆம் இடம்பிடித்த அஞ்சனா ஷாஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது காருக்கு முன் ஒருவர் பைக்கில் சென்றதாகவும், பைக் மீது மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பியதில், கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

விபத்தில் ஆன்சி, அஞ்சனா உயிரிழந்த நிலையில், உடன் பயணித்த மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments