பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர மாற்றுத்திறனாளி கோரிக்கை, 65 ஆயிரத்தை கலெக்டருக்கு அனுப்பிய சென்னை வாசி

0 3817

கிருஷ்ணகிரியில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருமாறு, கோரிக்கை மனு அளித்திருந்த மாற்றுத் திறனாளிக்கு 65ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி வழங்கினார்.

சின்னக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சின்னக்கண்ணு என்பவர் தன்னிடம் இருந்த செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரக் கோரி, கடந்த மாதம் 18ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

இதுகுறித்த தகவலை செய்திகளின் வாயிலாக அறிந்த சென்னையை சேர்ந்த பட்டாபிராமன் என்பவர், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு இணையான பணத்தை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளியிடம் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு காசோலையை அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments