சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் பைக்கை இயக்கியதால் விபரீதம் ; பேருந்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி

0 4682
பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பைக்கில் சென்ற இளைஞர் பலி

சென்னை சின்னமலையில் சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் பைக்கில் வந்த இளைஞர், நிலைத்தடுமாறி கீழே விழுந்த நிலையில், அவர் மீது அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி, இறங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நங்கநல்லூரைச் சேர்ந்த முகமது யூனூஸ் என்ற மென்பொருள் பொறியாளர், சின்னமலை வழியாக பைக்கில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

காலை நேரத்தில் பரவலாக மழை பெய்துக் கொண்டிருந்த நிலையில், பைக்கில் வந்த முகமது, சாலையில் இருந்த சிறிய பள்ளத்தை கவனிக்காமல் அதன் வழியாக பைக்கை இயக்கவே, நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அருகே சென்ற மாநகர அரசுப் பேருந்தின் பின்சக்கரம் முகமது மீது ஏறி, இறங்கியது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த முகமது சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விபத்துக்கு காரணமான அந்த பள்ளம் கற்களைக் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற பள்ளங்கள் இருப்பதாகவும், மழை நேரத்தில் அதில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் விபத்து ஏற்பட வழிவகுக்கிறது எனவும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments