கிளாஸ்கோவில் இந்தியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி..
கிளாஸ்கோவில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன்வாழ் இந்தியர்கள், இந்தியவியலாளர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.
உலகின் 195 நாடுகளைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பருவ நிலை மாற்றத்தின் விளைவுகள், அதற்கான காரணிகள், பருவநிலை மாற்றச் சிக்கலை எதிர்கொள்ளும் வழிமுறைகள் ஆகியன பற்றி விரிவாக விவாதிக்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன்வாழ் இந்தியர்களையும், இந்தியச் சமூகம் குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்தியவியலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மாநாட்டிற்கு இடையே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
Comments