வங்கி, நிதி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் பெருமளவில் வாங்கியதால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் எண்ணூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
இந்தியப் பங்குச்சந்தைகளில் மூன்று நாட்களாகச் சரிவில் இருந்த வணிகம் இன்று ஏற்றமடைந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 258 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 930 ஆக இருந்தது.
வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உலோகத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு விலை 7 விழுக்காடு வரை உயர்ந்தது.
Comments