கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சி, முதலமைச்சர் திறப்பு

0 2208

சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ந்து வைத்தார்.

இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியில், 1751ஆம் ஆண்டு முதல் 1947 வரையிலான காலக்கட்டத்தில் வெளிவந்த புகைப்படங்கள், காந்தி, நேரு, வேலுநாச்சியார், உள்ளிட்டோரின் அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

வரும் 7ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், பீரங்கி குண்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய சுருள்வாள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து அமைக்கப்பட்ட நகரும் புகைப்பட கண்காட்சியையும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments