வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு!
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே 100 அடி சாலையில் ஜெய்நகர் பூங்காவில் தொடங்கும் இந்த மேம்பாலம் தேமுதிக அலுவலகம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நீண்டு செல்கின்றது. பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர், அதில் நடந்தும், காரிலும் பயணித்து சென்றார்.
பாலத்தின் மீது முதன்முறை பயணம் செய்த வாகன ஓட்டிகள் உற்சாகமாக கையசைத்துபடி வாகனத்தை ஓட்டி சென்றனர்.
இதேபோன்று, வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலத்தின் 2ஆம் அடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சுமார் 67 கோடி ரூபாய் மதிப்பில், தரமணி லிங்க் ரோடு முதல் வேளச்சேரி 100 அடி சாலை வரை 1,028 மீட்டர் நீளத்திலும், 13.5 மீட்டர் உயரத்திலும் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் காரில் பயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து வேளச்சேரி மேம்பாலத்தில் நடைபெற்று வரும் முதல் அடுக்கு பணிகளயும் அவர் பார்வையிட்டார். பிரதான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலங்களால் போக்குவரத்து நெரிசல் இனி பெருமளவு குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
Comments