கொட்டும் மழையில் குடைகளைப் பிடித்தபடி தீபாவளி 'பர்சேஸ்'... கடைவீதிகளில் குவிந்த மக்கள்
தீபாவளிப் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது பொருட்களை வாங்க கடைவீதிகளில் ஏராளமானோர் திரண்டனர்.
சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மழையைப் பொருட்படுத்தாமல் குடைகளைத் தாங்கியபடி தீபாவளிப் பொருட்களை வாங்கத் திரண்டனர்.
நெல்லை டவுண் ரதவீதிகளில் உள்ள துணிக்கடைகளில் புத்தாடைகளை வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கூட்டத்தை பயன்படுத்தி குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
மயிலாடுதுறை பெரியகடைவீதி, பட்டமங்கலதெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது. சாலையோர துணிக்கடைகளில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது.
சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு வெளுத்து வாங்கி வரும் கனமழையால் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலவீதி, தெற்குவீதி, கீழவீதி, வடக்குவீதிகளில் நடைபாதை வியாபாரிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ((சிதம்பரம் விஷூவல்))
தென்காசி பஜார் பகுதி உள்பட முக்கிய வீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. சாலை ஓரங்களில் விற்பனை செய்து வந்த சில்லறை வியாபாரிகள் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது.
Comments