சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

0 5190
சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

கடந்த 28ஆம் தேதி வியாழக்கிழமை மாலை, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, கழுத்து பகுதி ரத்தநாளத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை முடிந்து சிறப்பு மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருந்த நடிகர் ரஜினி உடல்நலம் தேறினார். இதையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முன்னதாக, இன்று காலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவேரி மருத்துவமனைக்கு சென்று ரஜினி உடல்நலம் விசாரித்தார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்த் தனது சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments