அயோத்தி ராமர் கோவிலுக்கு புனித நீர் அனுப்பிய ஆப்கானிஸ்தான் சிறுமி
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக, ஆப்கானிஸ்தானில் இருந்து காபூல் நதியின் புனித நீரை, சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக, நாடு முழுவதிலும் இருந்து கட்டுமானப் பொருட்கள், நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் கோவிலின் கட்டுமானப் பணியில் பயன்படுத்துவதற்காக 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து புனித நீர் பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக காபூல் நதியின் புனிதநீரை பாட்டிலில் அடைத்து பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
லக்னோவில் நடந்த நிகழ்ச்சியின் போது இதனைக் கூறிய உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிறுமி அனுப்பிய புனித நீரை கங்கையிலும் கலந்து, ராமர் கோவில் கட்டுமானத்திலும் தெளித்துவிட்டார்.
Comments