டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முதலாவது முனையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையம் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.
3 முனையங்கள் கொண்ட டெல்லி விமான நிலையத்தில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முதலாவது முனையம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் மூடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, தொற்றுப் பரவல் குறைந்துள்ள நிலையில் திறக்கப்பட்டுள்ள அம்முனையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ நிறுவனங்களின் உள்நாட்டு விமானங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் இயங்கத் தொடங்கி உள்ளன.
பயணிகள் பாதுகாப்பாக மற்றும் சுகாதாரமான சூழலில் இருப்பார்கள் என உறுதியளிப்பதாக டெல்லி சர்வதேச விமான நிலைய சிஇஓ விதே குமார் தெரிவித்துள்ளார்.
Comments