சைடஸ் கேடிலா நிறுவனம் சைகோவ்-டி கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க முன்வந்துள்ளதாக தகவல்
சைடஸ் கேடிலா நிறுவனம் சைகோவ்-டி கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 வயதிற்கு மேற்பட்டோருக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரால் ஆகஸ்டில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தடுப்பூசியின் விலை, 3 டோஸ்களுக்கும் சேர்த்து ஆயிரத்து 900 ரூபாய் என சைடஸ் கேடிலா நிறுவனம் முன்மொழிந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து, தடுப்பூசியின் விலையை குறைக்க மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், டோஸ் ஒன்றின் விலையை 265 ரூபாயாக குறைக்க சைடஸ் முன்வந்துள்ளதாகவும், இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, இந்த தடுப்பூசியின் 3 டோஸ்கள், 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
Comments