ஆஃப்கானிஸ்தானில் சொந்த ஊர்களை காலி செய்த மக்கள் ; கடுங்குளிர் நிலவுவதால் இடம்பெயர்ந்த மக்கள் அவதி

0 2236
கடுங்குளிர் நிலவுவதால் இடம்பெயர்ந்த மக்கள் அவதி

ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் சொந்த ஊர்களை காலி செய்து விட்டு மாற்று இடங்களுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் கடுங்குளிரில் உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.

கடுங்குளிரில் பச்சிளம் குழந்தைகள் சில உயிரிழந்ததாக இடம்பெயர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். குளிர்காலத்தில் கடுமையான பஞ்சம் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இடம்பெயர்ந்தவர்களுக்காக சர்வதேச அளவில் வரும் மனிதாபிமான உதவிகள் வந்து சேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல சுமார் 50 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து காபுல் நகரத்துக்கு வந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments