நவம்பர் முதல் நாளே தமிழ்நாடு என்று தொடர்ந்து இருக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

0 3589

வம்பர் முதல் நாளே தமிழ்நாடு நாள் என்று தொடர்ந்து இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு எனப் பெயர்சூட்டிய ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது பொருத்தமற்ற, மரபு மீறிய உள்நோக்கம் கொண்ட, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டச் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்கள் நவம்பர் முதல் நாளை மாநில நாளாகக் கொண்டாடுவதையும், அதே நாளில்தான் இன்றைய தமிழ்நாடும் தோன்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை என்று பிறந்ததோ அந்த நாளில் தான் பிறந்த நாள் கொண்டாடப்படுமே தவிரப் பெயர் மாற்றம் செய்த நாளில் கொண்டாடப்படாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments