பார்சிலோனா அணியின் செர்கியோ அகுவேரோ-வுக்கு போட்டியின் போது நெஞ்சு வலி மருத்துவமனையில் அனுமதி
பார்சிலோனா அணியின் முன்னனி வீரரான செர்கியோ அகுவேரோ-வுக்கு கால்பந்து ஆட்டத்தின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த செர்கியோ அகுவேரோ ஸ்பெயினின் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். பார்சிலோனாவில் நடைபெற்ற அலேவ்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியின் போது, தனக்கு பதிலாக வேறொரு வீரரை களமிறக்குமாறு பயிற்சியாளரை நோக்கி சைகை செய்தார். அடுத்த சில நிமிடங்களில் மார்பை பிடித்தவாறே மைதானத்தில் படுத்தார்.
அங்கு விரைந்த மருத்துவர்களிடம் தலை சுற்றுவது போல் உள்ளதாகத் தெரிவித்தார். ஓரிரு நிமிடங்களில் எழுந்த அகுவேரோ தானாக மைதானத்தை விட்டு நடந்து சென்றார். 33 வயதாகும் அகுவேரோ அர்ஜெண்டினா அணிக்காக 101 போட்டிகளில் விளையாடி 41 கோல்கள் அடித்துள்ளார்.
Comments