பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் சிறுதானியங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு
பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டமான பிரதான் மந்திரி போஷான் திட்டத்தில், சிறுதானிய வகைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் வகையில் சிறுதானியங்களை மதிய உணவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய குடும்ப நல ஆய்வின்படி, 5 வயதுக்குட்பட்ட 38 சதவீத குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடு உள்ளதும், 59 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை பாதிப்பு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய பள்ளிக்கல்வித்துறை மற்றும் வேளாண்துறை செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், சிறுதானிய நுகர்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Comments