தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.!

0 4314

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இதனால், இன்று முதல் 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூரில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், குமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 3,4 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடியில் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இரு நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments