"பூஸ்டர் டோஸ்" மாடர்னா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்!
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் "பூஸ்டர் டோஸ்" மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
பின்னர் பேசிய கமலா ஹாரிஸ், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இறந்தவர்கள் என்றார். எனவே தடுப்பூசி போட்டுக்கொண்டு தொற்றுநோயைக் கடந்து செல்வோம்" என்று அவர் கூறினார்.
தகுதியுடையவராக இருக்கும் அமெரிக்க மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 57 வயதான கமலா ஹாரிஸ் ஏற்கெனவே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளார்.
Comments