கர்ப்பிணி மனைவியைப் பார்க்க மாமனார் வீட்டுக்குச் சென்ற மருமகன் மர்மமான முறையில் உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கர்ப்பிணி மனைவியைப் பார்க்க மாமனார் வீட்டுக்குச் சென்ற மருமகன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக மாற்றக் கோரி உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், ஒன்பது மாத கர்ப்பிணியான மனைவி பவித்ராவைப் பார்க்க வேப்பூரிலுள்ள அவரது மாமனார் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றுள்ளார். அன்று இரவு அவர் உடல்நிலை பாதித்து உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தாருக்குத் தகவல் சென்றுள்ளது.
ஆனால் திருமணத்துக்கு முன் பவித்ராவைக் காதலித்த அவரது உறவினர் மகன் தான் வேல்முருகனை கொலை செய்துள்ளார் என்றும் பவித்ரா குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
Comments