தீபாவளியன்று இறைச்சி கடைகளைத் திறக்க அனுமதி
தமிழ்நாட்டில் தீபாவளியன்று இறைச்சி கடைகளைத் திறக்க அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாவீரர் ஜெயந்தி நாளன்று இறைச்சி கடைகள் மூடப்படும் நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இம்முறை தீபாவளி அன்று மகாவீரர் ஜெயந்தி நாளும் வருவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு தீபாவளியன்று இறைச்சி கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள், ஜெயின் ஆலயங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் இறைச்சி கடைகள் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Comments