தாலிபான் அரசை ஐ.நா.சபையில் அனுமதிக்க இப்போதைக்கு தயாராக இல்லை ; ஐ.நா-வுக்கான ரஷ்ய தூதர் வாஸிலி நெபென்ஜியா
தாலிபான் அரசை ஐ.நா.சபையில் அனுமதிக்க இப்போதைக்கு தயாராக இல்லை என ஐ.நா-வுக்கான ரஷ்ய தூதர் வாஸிலி நெபென்ஜியா தெரிவித்துள்ளார்.
தாலிபான் மீதான பொருளாதார மற்றும் அரசியல் தடைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர், ஆனால் அதை உடனடியாக செய்யும் அவசியம் இல்லை எனக் கூறினார்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் உரிமைகள் பாதுகாப்பு , தீவிரவாத ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்டவற்றில் தாலிபான்களின் மீது நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே ஐ.நா.வில் அனுமதிப்பதும், அந்நாடு மீதான தடைகளை நீக்குவதும் குறித்து பரிசீலிக்கப்படும் என ரஷ்ய தூதர் தெரிவித்தார்.
மேலும் , ஆப்கானிஸ்தானின் பொருளாதார நிலைமையை சீர் செய்வதே தற்போதைய தலையாய வேலை என அவர் கூறினார்.
Comments