ஊராட்சி நிதியில் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் ; 2 பஞ்சாயத்துத் தலைவர்களின் காசோலை அதிகாரத்தை பறித்த மாவட்ட ஆட்சியர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு பஞ்சாயத்துத் தலைவர்களின் அதிகாரத்தைப் பறித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிச்சாண்டார்கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் சோபனாவின் கணவர் தங்கமணிதான் ஊராட்சி நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறார் என்று கூறப்படும் நிலையில், ஊராட்சி உறுப்பினர்கள் சிலர் ஊழல்தடுப்பு பிரிவு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு ஆதாரத்துடன் புகார் அளித்தனர்.
இதனையடுத்து ஊராட்சி தொடர்பான வரவு செலவு கணக்குகளை திருச்சி ஊழல்தடுப்பு போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தீராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்ரியின் கணவர் மெத்துச் செல்வன் என்பவர் மீதும் இதேபோன்றதொரு முறைகேடு புகார் எழுந்தது.
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரின் பரிந்துரைப்படி, சோபனா மற்றும் சாவித்திரி ஆகியோரின் காசோலை அதிகாரத்தைப் பறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
Comments