கடையம் ஒன்றியக் குழு தலைவர் செல்லம்மாள் என்பவர் ராஜினாமா

0 4523
கடையம் ஒன்றியக் குழு தலைவர் செல்லம்மாள் என்பவர் ராஜினாமா

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியக் குழு தலைவர் செல்லம்மாள் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17வார்டுகளில் திமுக சார்பில் 11 வார்டுகளிலும் அதிமுக சார்பில் 5 வார்டுகளிலும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர்.

ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் வெற்றி பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதே கட்சியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தோல்வியுற்றார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்த செல்லம்மா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments