2020-ல் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகள்.. 1.33 லட்சத்துக்கும் மேலானோர் பலி - தேசிய குற்ற ஆவண காப்பகம்

0 2735
இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 201 பேர் உயிரிழந்துள்ளதாக NCRB என்னும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 201 பேர் உயிரிழந்துள்ளதாக NCRB என்னும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 3 லட்சத்து 54 ஆயிரத்து 796 சாலை விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ள NCRB , இதில் 3 லட்சத்தில் 35 ஆயிரத்து 201 பேர் காயமடைந்ததாக கூறியுள்ளது.

சாலை விபத்துகளால் ஏற்பட்ட இறப்புகளில்  60 சதவீதத்துக்கும் அதிகமானவை அதிவேகத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதால் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜாக்கிரதை மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதன் மூலம் எற்பட்ட விபத்தில் 24.3 சதவீதம் பேர் இறந்ததாக  NCRB தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments