ரோமில் ஜி 20 மாநாடு.. பிரதமர் பங்கேற்று பேச்சு..!

0 2083
ரோமில் ஜி 20 மாநாடு.. பிரதமர் பங்கேற்று பேச்சு..!

இத்தாலி தலைநகர் ரோமில் ஜி 20 நாடுகளின் மாநாட்டில், உலகப் பொருளாதாரம், உலக நலவாழ்வு என்னும் தலைப்பிலான அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஜி 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

இத்தாலிக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ரோம் நகரில் நடைபெறும் ஜி 20 மாநாட்டின் அரங்குக்குச் சென்றார். அவரை மாநாட்டுத் தலைவரும் இத்தாலிய பிரதமருமான மரியோ டிராகி வரவேற்று அழைத்துச் சென்றார்.

மாநாட்டு மேடையில் பிரதமர் மோடி உட்பட ஜி 20 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நின்று குழுவாகப் படம் பிடித்துக்கொண்டனர். அதேபோல் கொரோனா சூழலில் சிறப்பாகப் பணியாற்றிய முன்களப் பணியாளர்களும் தலைவர்களுடன் நின்று படம்பிடித்துக்கொண்டனர்.

உலகப் பொருளாதாரம் மற்றும் உலக நலவாழ்வு என்னும் பெயரில் நடந்த மாநாட்டு அமர்வில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். உலகப் பொருளாதாரம், நலவாழ்வு ஆகியவற்றுக்கான அச்சுறுத்தல்களைக் கூட்டாக முறியடிப்பது பற்றித் தலைவர்கள் விரிவாகப் பேச்சு நடத்தினர்.

ஜி 20 மாநாட்டின் இடையே பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானைப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் உடனிருந்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments