"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சீனாவில் இருந்து வெடிகள் இறக்குமதி செய்யாமல் புறக்கணித்ததால் சீன ஏற்றுமதியாளர்களுக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் தகவல்
தீபாவளிக்காகச் சீனாவில் இருந்து வெடிகள் இறக்குமதி செய்யாமல் புறக்கணித்ததால் சீன ஏற்றுமதியாளர்களுக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சீனப் பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிக்கும்படி வணிகர்களுக்கு அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உட்பட நாட்டின் முதன்மையான 20 நகரங்களில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் இந்த ஆண்டில் சீனாவில் இருந்து வெடிகள் இறக்குமதி செய்ய ஆணைகள் வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இதனால் சீன வெடி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
Comments