முல்லைப்பெரியாறு அணையின் நீர் , கேரளம் தன்னிச்சையாகத் திறந்ததா? தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுமுன்பே மதகுகள் வழியாகத் தண்ணீரைக் கேரளத்துக்குத் திறந்தது குறித்துத் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.
கேரள அமைச்சர்கள், இடுக்கி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மதகுகளில் இருந்து தண்ணீரைத் திறந்து விடப்பட்டிருப்பதாகவும், அப்போது தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் உடனிருந்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னும் அணை நீர் கிடைக்காத நிலையில் கேரளத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும், தமிழ்நாட்டின் உரிமை பறிபோய் உள்ளதாகவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இசைவுடன் கேரள அமைச்சர்கள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டதா? அல்லது கேரள அரசு தன்னிச்சையாகவே தண்ணீரைத் திறந்ததா? என்கிற வினாவுக்குத் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments