எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் குழந்தையுடன் பெண் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென விழுந்த ஃபேன்... பெண் தலையில் காயம்

0 3100

சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் சீலிங் ஃபேன் கழன்று கீழே விழுந்ததில், பெண் ஒருவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

அம்மருத்துவமனையில் பிரசவத்திற்காக தினசரி பலர் அனுமதிக்கப்படும் நிலையில், நள்ளிரவில் புஷ்பா என்பவர் தனது குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சீலிங் ஃபேன் கீழே விழுந்துள்ளது. இதில் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் அடையாறில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஃபேன் விழுந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தபின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments