போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் ஜாமீனில் விடுதலை

0 3517

 

போதைப்பொருள் வழக்கில் ஜாமீன் பெற்ற நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த வியாழக்கிழமை 14 நிபந்தனைகளுடன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், உத்தரவு நகலை சிறைக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

உத்தரவு நகல் கிடைத்ததை அடுத்து, இன்று காலை மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து ஆர்யன்கான் விடுவிக்கப்பட்டார்.

சிறைக்கு வெளியே காத்திருந்த ஷாருக் கானின் ரேஞ்ச் ரோவர் காரில் ஏறி, ஆர்யன் கான் வீட்டிற்கு சென்றார்.

ஷாருக் கானின் வீடு அமைந்துள்ள மும்பையின் மன்னத் பகுதியில், அவரது ரசிகர்கள் உள்ளிட்டோர் ஆர்யன் கானுக்கு வரவேற்பளித்தனர்.

முன்னதாக, இன்று காலையில் இருந்தே ஷாருக் கானின் வீட்டிற்கு வெளியே, ஆர்யன் கானை வரவேற்கும் வகையில் பதாகைகளை ஏந்தி, ஷாருக் ரசிகர்கள் காத்திருந்தனர்.

 

#WATCH Aryan Khan released from Mumbai's Arthur Road Jail few weeks after being arrested in drugs-on-cruise case pic.twitter.com/gSH8awCMqo

— ANI (@ANI) October 30, 2021 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments