மருத்துவர்கள் சரிவர கவனிக்கவில்லை... மருத்துவர் போல் வேடமணிந்து 3 நாட்கள் பாட்டிக்கு பணிவிடைகள் செய்து மாட்டிக் கொண்ட இளைஞர்

0 4388

ரஷ்யாவில் கொரோனா வார்டில் இருக்கும் தன் பாட்டியை மருத்துவர்கள் சரிவர கவனிக்கவில்லை என கருதிய இளைஞர், மருத்துவர் போல் வேடமணிந்து 3 நாட்கள் தன் பாட்டிக்கு பணிவிடைகளை செய்து மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

Tomsk நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் பாட்டியை மருத்துவர்கள் சரிவர கவனிக்கவில்லை என சக நோயாளிகள் கூறியதை கேட்டு வருந்திய செர்கே என்பவர், மருத்துவர் போல் வேடமணிந்து, 3 நாட்கள் தன் பாட்டியுடன் தங்கி இருந்து அவரை கவனித்துள்ளார்.

பாட்டியை வேறு வார்டுக்கு மாற்றியது தெரியாமல் தேடிய போது செர்கே மாட்டிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து வருவதாகவும், விசாரணைக்கு பின் செர்கே மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படும் என மாகாண ஆளுநர் Alyona Levko தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments