தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை

0 1983

தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம், தீயணைப்பு நிலையம், டாஸ்மாக், உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது.

அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக முகவர்களிடமிருந்து ஏறத்தாழ 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத 1லட்சத்து 38 ஆயிரம் ரூபாயும், கடலூர் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார டாஸ்மாக் கடைகளில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஒசூர், ராசிபுரம், காரைக்குடி, கோவில்பட்டி, நாகப்பட்டினம்  உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள அரசு அலுவலகங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments