ஜி20 நாடுகள் உச்சி மாநாடு ரோம் நகரில் இன்று தொடக்கம்... பிரதமர் மோடி பங்கேற்பு

0 1843
ஜி20 நாடுகள் உச்சி மாநாடு ரோம் நகரில் இன்று தொடக்கம்

இத்தாலியின் ரோம் நகரில் இன்று தொடங்கும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரைநிகழ்த்துகிறார்.வாடிகன் நகருக்கு செல்லும் மோடி, போப்ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்துப் பேச உள்ளார்.

இத்தாலிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோம் நகரின் பலாசோ சிக்கி மாளிகையில்,  இத்தாலி பிரதமர் மரியோ டிராகி மோடியை வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.

இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தை வேகமாக நிறைவேற்றியதற்கும் நட்பு நாடுகளுக்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இணங்கியதற்கும் பிரதமர் மோடியை இத்தாலியப் பிரதமர் பாராட்டினார். தடுப்பூசி சான்றிதழ் மூலம் சர்வதேச பயணங்களுக்கான தடைகளை நீக்கியதற்கு அவர் வரவேற்புத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ரோம் நகரில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.

ஜி20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ரோம் நகரில் இன்று தொடங்குகிறது. கொரோனா பேரிடருக்குப் பிறகான பொருளாதார மீட்சி வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து மோடி உரை நிகழ்த்த உள்ளார்.

வாடிகன் செல்லும் பிரதமர் மோடி போப்பாண்டவர் பிரான்சிசை சந்தித்துப் பேச உள்ளார். பிரான்ஸ் அதிபர் மேக்ரன் உள்ளிட்டோரையும் பிரதமர் சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றும் அதன் விளைவுகளும் உலக மக்களைப் பாதித்துள்ளது பற்றிப் போப் பிரான்சிசும் பிரதமர் மோடியும் விவாதித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால் உலகம் எதிர்கொண்டுள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா சூழலில் தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா உதவி செய்ததைப் போப் பிரான்சிஸ் பாராட்டியதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments