தீங்கான வேதிப்பொருளால் செய்த வெடிகளை வெடிக்கத் தடை - உச்சநீதிமன்றம்!
பட்டாசு வெடிப்பதை முழுமையாகத் தடை செய்யவில்லை என்றும், தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களைக் கொண்டு பட்டாசு தயாரிக்க, விற்க, வெடிக்க மட்டுமே தடை விதித்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பேரியம், பேரியம் நைட்ரேட், பாதரசம் ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்ட பட்டாசு தயாரிக்க, விற்க, வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சரவெடிகளைத் தயாரிக்க விற்கவும் வெடிக்கவும் தடை விதித்துள்ளது. போலியாகப் பசுமைப் பட்டாசு தயாரித்தால், அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
நல்வாழ்வு என்பது அடிப்படை உரிமை என்றும், கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டாசு வெடித்துக் காற்றை மாசுபடுத்தி ஒருவரின் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. எந்த விதிமீறல் கண்டறியப்பட்டாலும் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதை மாநில அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Comments