தூத்துக்குடியில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம்!

0 3616

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புக்களை அவரது உறவினர்கள் தானம் அளித்துள்ளனர். சங்கராஜபுரத்தைச் சேர்ந்த கார்த்திகா என்ற அந்தப் பெண், கடந்த 25ஆம் தேதி கவர்னகிரியிலிருந்து தனது தந்தையுடன் டிவிஎஸ் எக்சல் வாகனத்தில் ஓட்டப்பிடாரம் நோக்கிச் சென்றுள்ளார்.

அவரது 5 வயது மகளும் கார்த்திகாவின் மடியில் அமர்ந்தவாறு பயணித்திருக்கிறாள். மாஞ்சாங்குளம் அருகே கார்த்திகாவின் சேலை வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதில் குழந்தையுடன் அவர் கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலமாக அடிபட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும் பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்த நிலையில் உறவினர் சம்மதத்துடன், கார்த்திகாவின் 2 கண்கள், 2 கிட்னிகள், இதயம், இதய வால்வு, தோல்,  உள்ளிட்ட  உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments