புதுக்கோட்டையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சீல்!

0 4066

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள  ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அழியாநிலை மற்றும் குரும்பூர் கிராமத்தில்  சந்திரசேகர் என்பவர் நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லம் உரிய அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஆட்சியர் உத்தரபின்படி இரண்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கும் சீல் வைத்த அதிகாரிகள் அங்கு தங்கியிருந்த 127 பேர்களையும் புதுக்கோட்டையில் உள்ள அரசு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments