ஆர்யன் கான் பாஸ்போர்ட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு

0 2360

ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க, மும்பை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, அவரது  பாஸ்போர்ட்டை உடனடியாகச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், நீதிமன்ற அனுமதியில்லாமல் வெளிநாட்டுக்குச் செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் பிணையம் வழங்குவதுடன், அதே மதிப்பில் பிறரின் உத்தரவாதம் அளிக்க வேண்டும், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், உடன் குற்றஞ்சாட்டப்பட்டோருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயலக் கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments