முல்லைப் பெரியாறு அணையில் பின்புற மதகுகள் வழியாக கேரள அரசு தண்ணீர் திறப்பு
முல்லை பெரியாறு அணையின் பின்புற மதகுகள் வழியாக இடுக்கி அணைக்கு செல்லும் வகையில் நீர் திறக்கப்பட்டது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், முல்லை பெரியாறு அணை தற்போது 138.85 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,184 கன அடி வீதமாக உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அணையின் பின்புறம் உள்ள 3 மதகுகள் வழியாக வினாடிக்கு 550 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின்,வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் நீரை திறந்து வைத்தனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு செல்லும்.
Comments