அண்ணாத்த திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்படுவதை தடுக்க நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு!

0 3483

நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் அண்ணாத்த படம், சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறி தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோதமாக இணையதளங்களில் அண்ணாத்த படத்தை வெளியிடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments