கீழடியில் தொல்லியல் துறை அகழாய்வு செய்த இடங்களை முதலமைச்சர் பார்வை
கீழடியில் தொல்லியல் துறை அகழாய்வு செய்த இடங்களையும், அகழாய்வில் கிடைத்த பொருட்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அகழ் வைப்பகம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மதுரைக்கு விமானத்தில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் கீழடிக்குச் சென்றார். அங்குத் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்த இடங்களையும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டார்.
பொருட்களை வைப்பதற்காகக் கீழடியில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகழ்வைப்பகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் ஜனவரி மாதத்தில் நிறைவடைந்து கட்டடம் பயன்பாட்டுக்கு வரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளின் நிலை, முன்னேற்றம் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
Comments