முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

0 2771

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடல்நலக்குறைவால் நேற்று காலமான நிலையில், அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

74 வயதான நன்மாறன் மூச்சு திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை காலமானார். மதுரை மாபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கபட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்மாறன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments