மேற்குவங்கத்தில் பட்டாசுகளுக்கு முழுமையாக தடை கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு
மேற்குவங்கத்தில் பட்டாசுகளுக்கு முற்றாக தடை விதிக்கக்கோரிய வழக்கு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பசுமை பட்டாசுகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெடிக்க மேற்குவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், அதில் இருந்து மீண்டவர்களுக்கும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை, பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முற்றாக தடை விதிக்க வேண்டும் என மருத்துவர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சர் மம்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், அம்மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதாக மத்திய அரசும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் பட்டாசுகளுக்கு முழுமையாக தடைவிதிக்கக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Comments