கர்நாடகத்தின் கேஆர்எஸ் அணை 11 ஆண்டுகளுக்கு பிறகு முழுகொள்ளளவை எட்டியது

0 2987

கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை 11 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், 124 அடி மொத்த உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டுவது வழக்கம்.

ஆனால், தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,735 கன அடி வீதமாக அதிகரித்திருக்கிறது. வினாடிக்கு 3600 கன அடி வீதம், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments