தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல்...100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி குழந்தை அதிரடியாக மீட்பு
குஜராத் மாநிலம் வடோதராவில் அருகில் உள்ள லிலோரா கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் கைக்குழந்தையை போலீசார் மீட்டனர்.
தாயுடன் அந்தக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தை கடத்தப்பட்டது. இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கல்பேஷ் ரத்தோட் என்ற நபர் பீகாரில் குழந்தை இல்லாத ராணுவ வீரரிடம் 4 லட்சம் ரூபாயக்கு அந்தக் குழந்தையை விற்றதை அறிந்த போலீசார் விமானம் மூலம் பீகார் விரைந்து சென்று அதிரடி நடவடிக்கை எடுத்து குழந்தையை மீட்டனர்.குழந்தையைக் கடத்தியவரும் விலைக்கு வாங்கியவரும் கைது செய்யப்பட்டனர்.
Comments