தெலுங்கானாவில் ஒரு கிலோ கூட நெல்லைக் கூட கூடுதலாக வாங்கப்போவதில்லை - மத்திய அரசு
ராபி பயிர்கள் பயிரிடுவதற்கு தெலுங்கானா அரசு தடை விதிப்பது குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
அதிகாரப்பூர்வமான தடை விதிக்கப்படாத போதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வாய்வழி உத்தரவில் விவசாயிகளுக்கு நெல் விதைகளை விதை கம்பெனிகள் விற்பதைத் தடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.விதை தயாரிக்கும் நிறுவனங்கள் எண்ணெய்ப்பயிர்களான கடலை , மற்றும் கருப்பு மிளகு, போன்றவற்றை உற்பத்தி செய்து கையிருப்பு வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட போதும் நெல்விதைகளை உற்பத்தி செய்து கையிருப்பு வைக்க அனுமதியளிக்கப்படவில்லை.
5 ஆண்டுகளுக்கு தேவையான நெல் கையிருப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இதனால் மத்திய அரசு food corporation of india மூலமாக 6 மில்லியன் டன்கள் அரிசிக்கு மேல் தெலுங்கானாவில் ஒரு கிலோ கூட நெல்லைக் கூட கூடுதலாக வாங்கப்போவதில்லை என்று கூறியிருப்பதால் ராபி பருவத்தில் நெல் பயிர்களை விதைப்பது உகந்ததாக இருக்காது என்று அதிகாரிகள் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Comments