சொந்த நாட்டிலே அகதிகளாக மாறிய ஆப்கான் மக்களுக்கு நிவாரணம்
ஆப்கான் தலைநகர் காபூலில் ஐ.நா. சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.
தாலிபான் ஆட்சி மாற்றத்திற்கு பின் சர்வதேச நிதி மற்றும் முதலீடுகள் தடைபட்டதால் ஆப்கானில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு மக்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகினர். குழந்தைகள், பெண்கள் உள்பட ஏறத்தாழ 90 லட்சம் மக்கள் பட்டினியாக இருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
நிதியாளர்கள் கொடுத்த நன்கொடையை வைத்து இருப்பிடத்தை விட்டு வெளியேறிய 130 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
Comments