போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்தது.. நாளைக்குள் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு

0 2646

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு போதைப் பொருள் வழக்கில் ஜாமீன் கிடைத்தது.

இன்று அல்லது நாளைக்குள் நீதிமன்ற உத்தரவு கையில் கிடைத்ததும் ,அவர் மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து வீடு திரும்ப உள்ளார். ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்ததும் கண்கலங்கிய ஷாருக்கான், தமது உதவியாளர் மற்றும் வழக்கறிஞர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இதனிடையே ஷாருக்கானின் இல்லமான மன்னத் அருகே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். ஆர்யன் விடுவிக்கப்பட்டதற்கு அவர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புப் பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments