ஃபேஸ்புக் "மெட்டா" என பெயர் மாற்றம்... அறிவித்த மார்க் ஸக்கர்பர்க்!
பேஸ் புக் புதிதாக META என்று தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளது.
மெட்டாவர்ஸ் அடுத்த புதிய தளம் என்று அந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கின் வருடாந்திரக் கூட்டத்தில் இதனை அறிவித்த ஸக்கர்பர்க், சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டதாகவும், அவற்றைக் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தின் பங்குச் சந்தையிலும் புதியபெயரையே புழங்க விடப்போவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களின் முதன்மையாக விளங்கக் கூடியது ஃபேஸ்புக் நிறுவனம். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவை கூட ஃபேஸ்புக்கின் துணை நிறுவனங்களே.
Comments