100ஆவது பிறந்த நாளை மூன்று தலைமுறையுடன் கொண்டாடிய ராணுவ வீரர் : பிறந்தநாள் கேக்கில் இடம் பெற்ற துப்பாக்கி, பகவத் கீதை, திருக்குறள் புத்தகம்

0 3201

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லட்சுமணம்பட்டியில் ராணுவ வீரர் தனது 100வது பிறந்த நாளை மூன்று தலைமுறை பேரன் பேத்திகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.1921 ல் பிறந்தவர் பழனிசாமி, இவருக்கு 4 மகன்,  2 மகள்கள்  உள்ளனர்.

அவர்களது பேரன் பேத்தி மற்றும் கொள்ளுப் பேரன் பேத்திகள் என 50க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இன்று அவரது பிறந்தநாளை இணைந்து நடத்தினர். தாய் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக ராணுவ வீரர் துப்பாக்கி, பகவத் கீதை, திருக்குறள் பிறந்தநாள் கேக்கில் இடம்பெற்றிருந்தது.

ராணுவ நண்பர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர். நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்வதற்க்கு தீய பழக்கங்கள் தன்னிடம் இல்லை என்று பெருமையுடன் கூறி மகிழ்ந்தார் பழனிசாமி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments